தமிழ் குன்றிமணி யின் அர்த்தம்

குன்றிமணி

பெயர்ச்சொல்

 • 1

  முழுதும் சிவப்பாக அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கறுப்பாகவும் உள்ள, கொத்தாகக் காய்க்கும், உருண்டையான சிறிய விதை/அந்த விதையைத் தரும் ஒரு வகைக் கொடி.

  ‘களிமண்ணில் பிள்ளையார் சிலை செய்துவிட்டுக் குன்றிமணிகளைக் கண்களாகப் பொருத்துவார்கள்’
  ‘வீட்டில் குன்றிமணி அளவுகூடத் தங்கம் இல்லை. தங்கையின் கல்யாணத்தை எப்படி நடத்தப்போகிறேனோ?’

 • 2

  பொன்னை நிறுக்கப் பயன்படுத்தும் நான்கு நெல் எடை உள்ள ஓர் அளவு.

  ‘இரண்டு குன்றிமணி எடை என்பது ஒரு கிராம் ஆகும்’