தமிழ் குப்பென்று யின் அர்த்தம்

குப்பென்று

வினையடை

 • 1

  (ஒரு உணர்ச்சியின் எதிர்பாராத தாக்குதலால்) அடுத்த கணமே.

  ‘தன் மேல் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டதைக் கேட்டு அவனுக்குக் குப்பென்று வேர்த்தது’
  ‘வெட்கத்தால் முகம் குப்பென்று சிவந்தது’

 • 2

  (மணம், புகை போன்றவை) ஒரேயடியாகத் திரண்டுவருவதுபோல்.

  ‘சமையல் கட்டிலிருந்து ஏதோ தாளிக்கும் மணம் குப்பென்று மூக்கைத் தாக்கியது’
  ‘சாக்கடையிலிருந்து நாற்றம் குப்பென்று அடித்தது’
  ‘சரவெடி வெடித்த இடத்திலிருந்து குப்பென்று புகை எழுந்தது’