தமிழ் குப்பை யின் அர்த்தம்

குப்பை

பெயர்ச்சொல்

 • 1

  (கிழிக்கப்பட்ட தாள், கந்தல் துணி போன்ற) உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை.

  ‘கூடையில் குப்பை நிரம்பிவிட்டது’

 • 2

  காற்று அடித்துக் கொண்டுவரும் தூசி, செத்தை முதலியவை.

  ‘முதலில் கொல்லையைப் பெருக்கிக் குப்பையை அள்ளு!’

 • 3

  (வெறுப்பாகக் கூறும்போது) மதிக்கத் தக்கதாக இல்லாதது.

  ‘இது கதையா, வெறும் குப்பை’