தமிழ் குப்பைகொட்டு யின் அர்த்தம்

குப்பைகொட்டு

வினைச்சொல்-கொட்ட, -கொட்டி

 • 1

  (சொல்பவர் நோக்கிலும் கேலியாகவும்) பயனற்ற வேலையில் பங்குபெறுதல்; பயனற்ற (ஒரே) வேலையைச் செய்தல்.

  ‘நீயும் அந்த அலுவலகத்தில்தான் குப்பைகொட்டுகிறாயா?’
  ‘இவ்வளவு நாள் கதை எழுதிக் குப்பைகொட்டியது போதும்!’

 • 2

  (குறைகள் இருந்தபோதும் ஒருவருடன் அல்லது ஓர் இடத்தில்) வாழ்க்கை நடத்துதல்.

  ‘என் சிடுமூஞ்சிப் பிள்ளையோடு மருமகளும் எப்படியோ இருபது வருடம் குப்பைகொட்டிவிட்டாள்’
  ‘இந்த ஊரிலும் எப்படியோ முப்பது வருடம் குப்பைகொட்டிவிட்டேன்’