தமிழ் குப்பைப்பிறாண்டி யின் அர்த்தம்

குப்பைப்பிறாண்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரிய பரப்பை எளிதாகச் சுத்தப்படுத்த) முனைப் பகுதியில் கூரான இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டதும் நீண்ட கைப்பிடியை உடையதுமான ஒரு சாதனம்.

    ‘முதலில் குப்பைப்பிறாண்டியால் இழுத்துவிட்டு விளக்குமாற்றால் கூட்டு’
    ‘உங்களுடைய குப்பைப்பிறாண்டியைத் தாருங்கள். காணியைச் சுத்தப்படுத்திவிட்டுத் தருகின்றோம்’