தமிழ் கும்பா யின் அர்த்தம்

கும்பா

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (சோறு பிசைவதற்கோ சந்தனம் வைப்பதற்கோ பயன்படுத்தப்படும்) விரிந்த தாமரை மலர் வடிவத்தில் வெள்ளியால் அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட பாத்திரம்; கிண்ணம்.

    ‘சந்தனக் கும்பா’
    ‘கும்பாவில் சோறு போட்டு ரசம் விட்டுப் பிசைந்தாள்’