தமிழ் கும்பிடு யின் அர்த்தம்

கும்பிடு

வினைச்சொல்கும்பிட, கும்பிட்டு

 • 1

  (தெய்வத்தை வழிபடும்போது அல்லது பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும்போது) இரு கைகளையும் கூப்பி வணங்குதல்.

  ‘இளைஞனாக இருந்தால் கைகுலுக்குவேன், வயதானவராக இருந்தால் கும்பிடுவேன்’

 • 2

  (தெய்வத்தை) வழிபடுதல்.

  ‘திருப்பதிக்குப் போய்ச் சாமி கும்பிட்டோம்’
  ‘அம்மா கருப்பசாமியைக் கும்பிட்டுவிட்டு வந்தாள்’
  ‘நாங்கள் கும்பிடும் ஏசு எங்களைக் கைவிட மாட்டார்’

தமிழ் கும்பிடு யின் அர்த்தம்

கும்பிடு

பெயர்ச்சொல்

 • 1

  (தெய்வ வழிபாட்டின் அறிகுறியாக அல்லது பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் முறையாக) இரு கை கூப்பிய வணக்கம்.

  ‘காலை எழுந்தவுடன் சாமி படத்தின் முன் நின்று ஒரு கும்பிடு போட்ட பின்புதான் பிற வேலைகளைச் செய்வான்’

 • 2

  ஒருவரோடு அல்லது ஒன்றோடு இனி தொடர்பே வேண்டாம் என்ற கருத்தில் கூறப்படுவது.

  ‘படிப்புக்கு ஒரு கும்பிடு’
  ‘மாமாவுக்கு ஒரு கும்பிடு; அவர் பேச்சே நமக்கு வேண்டாம்’