தமிழ் குமுறு யின் அர்த்தம்

குமுறு

வினைச்சொல்குமுற, குமுறி

 • 1

  (வெடிக்கும் முன் எரிமலை அல்லது காற்றால் கடல்) உரத்த ஒலியுடன் பொங்குதல்.

  ‘எரிமலை குமுறி வெடித்தது’

 • 2

  (கோபம், துக்கம் போன்ற உணர்ச்சிகள் மனத்தினுள்) கொந்தளித்தல்.

  ‘மனத்தில் கோபம் குமுறியது’
  ‘குமுறும் உணர்ச்சிகளுக்கு வடிகால் இல்லை’
  ‘அவள் குமுறிக்குமுறி அழுதாள்’