தமிழ் குரங்கு யின் அர்த்தம்

குரங்கு

பெயர்ச்சொல்

  • 1

    மரங்களில் வாழும், கிளைக்குக் கிளை தாவிச் செல்லும், (பெரும்பாலும்) நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.

    ‘குரங்குச் சேட்டை பண்ணாதே!’

  • 2

    மிகுந்த தொல்லை தரும் சிறுவர்களைக் கடிந்துகொள்ளப் பயன்படுத்தும் சொல்.

    ‘என் தம்பிக் குரங்குதான் பேனாவை எடுத்து ஒளித்துவைத்திருக்கும்’