தமிழ் குரல் யின் அர்த்தம்

குரல்

பெயர்ச்சொல்

 • 1

  (பேச்சை அல்லது பாட்டை வெளிப்படுத்த) தொண்டையில் உள்ள குரல் நாண்களின் அசைவால் உண்டாக்கும் ஒலி.

  ‘தொலைபேசியில் உங்கள் குரல் வேறு மாதிரி ஒலித்தது’
  உரு வழக்கு ‘நாவல் முழுதும் ஆசிரியரின் குரல் ஒலித்துக்கொண்டிருப்பதை உணர முடிகிறது’

 • 2

  (பேச்சு, பாட்டு முதலியவற்றுக்கு ஏற்ற) ஒலித் தன்மை; சாரீரம்.

  ‘பாடகருக்கு நல்ல வளமான குரல்’

 • 3

  கருத்தை வெளிப்படுத்தக் கையாளும் ஒலிப்பு விதம்; தொனி.

  ‘அவளைக் கண்டிப்பதற்கு நீங்கள் உபயோகித்த சொல்லும் குரலும் சரியானவை அல்ல’

 • 4

  முறையிடும் வகையிலோ அல்லது எதிர்ப்பு, கண்டனம் முதலியவற்றைக் காட்டும் வகையிலோ வெளிப்படுத்துவது.

  ‘கண்டனக் குரல்’
  ‘ஏழையின் குரலை யார் மதிக்கிறார்கள்?’

தமிழ் குரல் யின் அர்த்தம்

குரல்

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  (தமிழிசையில்) ஏழு ஸ்வரங்களில் முதல் ஸ்வரமான ‘ச’வைக் குறிப்பது.