தமிழ் குரல்கொடு யின் அர்த்தம்

குரல்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  பதில் தரும் முறையில் அல்லது கூப்பிடும் முறையில் குரல் எழுப்புதல்.

  ‘‘இதோ வந்துவிட்டேன்’ என்று குரல்கொடுத்துக்கொண்டே அவர் ஓடினார்’
  ‘நீங்கள் குரல்கொடுத்தால் போதும், நான் வந்துவிடுகிறேன்’

 • 2

  (எதிர்த்து அல்லது ஆதரித்து) கருத்துத் தெரிவித்தல்.

  ‘அநீதியை எதிர்த்துக் குரல்கொடுக்க ஒருசிலரே முன்வருவார்கள்’
  ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார்’

 • 3

  (திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சித் தொடரில்) தம் சொந்தக் குரலில் பேசாத நடிகர்களுக்குப் பிறர் தம் குரல் தந்து பேசுதல்.

  ‘பிரபல நட்சத்திரங்களுக்கு இவர் குரல்கொடுக்கிறார்’