தமிழ் குருடு யின் அர்த்தம்

குருடு

பெயர்ச்சொல்

 • 1

  பார்வை இல்லாமை.

  ‘குருட்டுப் பிச்சைக்காரன்’
  ‘மின்னல் தாக்கி அவருக்கு ஒரு கண் குருடாகிவிட்டது’
  ‘குருட்டுப் பூனை’

 • 2

  தகுதியற்ற வழக்கு பார்வை இழந்த நபர்.

  ‘பார்வையற்ற ஒருவரை அழைக்க ‘குருடு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது நாகரிகம் அல்ல’