தமிழ் குற்றச்சாட்டு யின் அர்த்தம்

குற்றச்சாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் மீது சுமத்தும் குற்றம்.

    ‘உன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’

  • 2

    விசாரணை எந்தெந்தக் குற்றங்களைக் குறித்தது என்று எதிரிக்கும் அரசுத் தரப்புக்கும் விசாரணைக்கு முன்பு நீதிமன்றம் தெரிவிக்கும் விவரங்கள்.

    ‘இந்தக் கொலை வழக்கில் இன்னும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை’