தமிழ் குற்றப்பத்திரிகை யின் அர்த்தம்

குற்றப்பத்திரிகை

பெயர்ச்சொல்

  • 1

    புலனாய்வு முடிந்தவுடன் சேகரிக்கப்பட்ட சாட்சியம், ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி சமர்ப்பிக்கும் அறிக்கை.

    ‘பேருந்தை எரித்தது சம்பந்தமாக நான்கு பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது’
    ‘குற்றப்பத்திரிகையின் நகல் எதிரிக்குக் கொடுக்கப்பட்டது’
    உரு வழக்கு ‘அப்பா உள்ளே நுழைந்ததும் அம்மா மளமளவென்று என்மீது குற்றப்பத்திரிகை படித்தாள்’