தமிழ் குற்றம் யின் அர்த்தம்

குற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  (சமூகத்தினர் எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்யாததால் அல்லது கவனக் குறைவால் ஏற்படும்) தவறு; பிழை.

  ‘பெற்றோரை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகிவிட்டேன்’
  ‘இந்த நூலில் காணப்படும் சொல் குற்றங்களுக்கு ஆசிரியரே பொறுப்பு’

 • 2

  சட்டப்படியோ சமூக வழக்குப்படியோ தண்டிக்கத் தகுந்ததாகக் கருதப்படும் செயல்.

  ‘கொலைக் குற்றம் புரிந்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது’
  ‘நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்!’