தமிழ் குற்றம்சாட்டு யின் அர்த்தம்

குற்றம்சாட்டு

வினைச்சொல்குற்றம்சாட்ட, குற்றம்சாட்டி

 • 1

  (குறிப்பிட்ட) குற்றத்தை ஒருவர் செய்ததாகக் காவல்துறை அவரைக் கைது செய்யும்போது அவரிடம் அறிவித்தல்.

  ‘ரயிலைக் கவிழ்க்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்’

 • 2

  (நியதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்ட) தவறுக்கு ஒருவரைப் பொறுப்பேற்கச் செய்தல்.

  ‘நடந்த தவறுக்கு என்னைக் குற்றம் சாட்டுவதுபோலப் பேசினார்’
  ‘அவனுக்கு நான் மிகவும் விட்டுக்கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டாதே!’