குறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குறி1குறி2குறி3

குறி1

வினைச்சொல்குறிக்க, குறித்து

 • 1

  (ஒருவர் சொன்னது, ஒருவரின் பேச்சு முதலியவற்றை) சுருக்கமாக எழுதுதல்.

  ‘அவர் சொன்னதையெல்லாம் குறித்துக்கொண்டாயா?’
  ‘நான் குறித்துவைத்திருந்த உன் முகவரியைத் தொலைத்துவிட்டேன்’

 • 2

  (கவனிக்க வேண்டி யதை அல்லது கவனித்ததை) பதிதல்; பதிவு செய்தல்.

  ‘இந்த நூலில் நான் குறித்திருக்கும் பக்கங்களை மட்டும் படித்தால் போதும்’
  ‘கேள்விக்கான பதில்களை ஆசிரியர் புத்தகத்தில் குறித்துக்கொடுத்தார்’
  ‘நீ வந்தது ஒன்பது மணிக்குத்தான் என்று பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது’

 • 3

  (ஒரு நிகழ்ச்சிக்கான தேதி, நேரம் முதலியவற்றை) நிச்சயித்தல்; நிர்ணயித்தல்.

  ‘கல்யாணத் தேதியும் குறித்தாகிவிட்டது’
  ‘குறித்த நேரத்தில் வந்திருந்தால் அவரைப் பார்த்திருக்கலாம்’

 • 4

  (ஒன்று மற்றொன்றை) சுட்டுதல்; (எது எங்கு உள்ளது என்று) சுட்டிக்காட்டுதல்; (துல்லியமாக) தெரிவித்தல்.

  ‘இந்தப் படம் எதைக் குறிக்கிறது?’
  ‘பூவின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்’

 • 5

  (ஜாதகத்தை) கணித்தல்.

  ‘குழந்தைக்கு ஜாதகம் குறித்தாகிவிட்டதா?’

குறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குறி1குறி2குறி3

குறி2

பெயர்ச்சொல்

 • 1

  சுடுவதற்காக அல்லது எறிவதற்காக நிர்ணயித்துக்கொள்ளும் பொருள் அல்லது இடம்; இலக்கு.

  ‘அவர் குறி தவறாமல் சுடுவதில் வல்லவர்’

 • 2

  நோக்கம்.

  ‘அவனைத் தோற்கடிப்பதுதான் என்னுடைய குறி!’
  ‘ஜெயிப்பதிலேயே குறியாக இருந்தான்’

 • 3

  ஒரு கருத்து, செயல் முறை போன்றவற்றைத் தெரிவிக்கும் அடையாளம்; குறியீடு.

குறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குறி1குறி2குறி3

குறி3

பெயர்ச்சொல்

 • 1

  (ஆண் அல்லது பெண்ணின்) இனப்பெருக்க உறுப்பு.