தமிழ் குறிஞ்சி யின் அர்த்தம்

குறிஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீல நிறப் பூப் பூக்கும், (மலைகளில் மட்டும் காணப்படும்) சிறு குத்துச்செடி.

    ‘நல்ல திரைப்படங்கள் குறிஞ்சி பூப்பது போல எப்போதாவதுதான் வருகின்றன’

  • 2

    (பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஐந்து வகைத் திணைகளில்) மலையும் மலையை ஒட்டிய பகுதியும்.