தமிழ் குறிப்பாக யின் அர்த்தம்

குறிப்பாக

வினையடை

  • 1

    (பலவற்றுள் ஒன்றையோ சிலவற்றையோ தெரிவிக்கும்போது) முக்கியமாக; சிறப்பாக.

    ‘நாட்டு மக்களின், குறிப்பாகக் கிராம மக்களின், உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது’
    ‘எனக்குப் பிடித்த சாப்பாடு என்று குறிப்பாக எதுவும் இல்லை’