தமிழ் குறிப்பிட்ட யின் அர்த்தம்

குறிப்பிட்ட

பெயரடை

 • 1

  (மற்றவற்றிலிருந்து) பிரித்துச் சொல்லப்பட்ட.

  ‘குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்’
  ‘குறிப்பிட்ட செயலாளர்கள் மட்டுமே தலைவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்’

 • 2

  (நேரம், காலம் முதலியவற்றைக் குறிக்கும்போது) (முன்பே) தீர்மானிக்கப்பட்ட; உரிய.

  ‘குறிப்பிட்ட நேரத்தில்தான் மருத்துவரை நீங்கள் பார்க்க முடியும்’
  ‘குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பம் வந்துசேர வேண்டும்’