தமிழ் குறிப்பிடு யின் அர்த்தம்

குறிப்பிடு

வினைச்சொல்குறிப்பிட, குறிப்பிட்டு

 • 1

  (ஏதேனும் ஒரு காரணம் கருதி ஒன்றை அல்லது ஒருவரை) குறிப்பாக அல்லது முக்கியமாகச் சொல்லுதல்; சுட்டிக்காட்டுதல்.

  ‘தற்கால எழுத்தாளர்களில் யார் சிறந்தவர் என்று நீங்கள் குறிப்பிடுவீர்கள்?’
  ‘இந்தியப் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத் தகுந்த விதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது’

 • 2

  தெரிவித்தல்; சொல்லுதல்.

  ‘நீங்கள் வெளியூர் செல்ல இருப்பதை ஏன் உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை?’
  ‘தமிழ் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர் தன் பேச்சின்போது குறிப்பிட்டார்’