தமிழ் குறிப்பு யின் அர்த்தம்

குறிப்பு

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய) சிறு விவரம்; சுருக்கம்.

  ‘வகுப்பில் ஆசிரியர் கூறிய பாடக் குறிப்புகள் தேர்வுக்குப் பயன்படும்’
  ‘ஒரு கணித மேதையின் வாழ்க்கைக் குறிப்பு இது’
  ‘வெளியுறவு அமைச்சகம் அனுப்பியுள்ள குறிப்பு இதைத் தெரிவிக்கிறது’

 • 2

  சுருக்கமான சான்று.

  ‘பண்டைத் தமிழகம்பற்றி அறிய வெளிநாட்டார் எழுதிய சில குறிப்புகள் பயன்படும்’

 • 3

  (வெளிப்படையாகவோ நேரடியாகவோ அல்லாமல்) சிந்தித்துப் புரிந்துகொள்ளக்கூடியதாக அல்லது தெரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பது.

  ‘இந்தப் புத்தகத்தில் பல செய்திகள் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன’
  ‘உனக்குக் குறிப்பாகச் சொன்னால் புரியாதா?’

 • 4

  வட்டார வழக்கு ஜாதகம்.

  ‘திருமணம் செய்வதற்குப் பையனுடைய குறிப்பையும் பெண்ணுடைய குறிப்பையும் பார்ப்பது வழக்கம்’