தமிழ் குறிப்பெடு யின் அர்த்தம்

குறிப்பெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (பேச்சு, பாடம், விவாதம் முதலியவற்றை) தொகுத்து எழுதுதல்; முக்கியச் செய்திகளைச் சுருக்கமாக எழுதுதல்.

    ‘முதலமைச்சரின் பேச்சைப் பத்திரிகை நிருபர்கள் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர்’
    ‘கட்டுரைக்காகப் பல புத்தகங்களைப் படித்து அவன் குறிப்பெடுத்திருக்கிறான்’