தமிழ் குறியீடு யின் அர்த்தம்

குறியீடு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு கருத்தைத் தெரிவிக்கும்) அடையாளம்; சின்னம்.

  ‘சிவப்புக் கொடி அபாயத்தின் குறியீடாகும்’

 • 2

  ஒரு கருத்துக்குப் பதிலாக வழங்குவது.

  ‘கணிதத்தில் + என்னும் குறியீடு கூட்டலைக் குறிக்கும்’

 • 3

  கருத்தை வெளியிடும் (பேச்சு, சைகை போன்ற) சாதனம்.

  ‘மொழி என்ற குறியீடு’