தமிழ் குறிவை யின் அர்த்தம்

குறிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (சுடுதல், எறிதல் முதலியவற்றுக்கான) இலக்கை உன்னிப்பாகப் பார்த்தல்.

  ‘மாங்காயைக் குறிவைத்து அடித்தான்’
  ‘ஒரு சில விநாடிகள் குறிவைத்தபடி நின்றிருந்த இந்திய வில்வித்தை வீரர் துல்லியமாக இலக்கை நோக்கி அம்பு விட்டார்’
  ‘குறிவைத்து மூக்கில் ஒரு குத்துவிட்டதில் ஆள் அப்படியே சரிந்து விழுந்தான்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரை) இலக்காக அல்லது நோக்கமாகக் கொள்ளுதல்.

  ‘அவர் மட்டுமல்ல, பலரும் அந்தப் பதவியின் மீது குறிவைத்துள்ளனர்’
  ‘வியாபாரிகளைக் குறிவைத்துப் போடப்பட்ட வரி’
  ‘பிரபல நடிகர்கள் தலைக்குக் குறிவைத்திருப்பதாக ஒரு தீவிரவாத அமைப்பு தெரிவித்திருக்கிறது’