தமிழ் குறுக்கிடு யின் அர்த்தம்

குறுக்கிடு

வினைச்சொல்குறுக்கிட, குறுக்கிட்டு

 • 1

  (பேசும்போது) இடைமறித்தல்.

  ‘நான் பேசும்போது குறுக்கிடாமல் கேளுங்கள்’
  ‘அமைச்சர் பேசும்போது எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கிட்டார்’

 • 2

  (பிறர் விஷயத்தில்) தலையிடுதல்.

  ‘இந்தத் தகராறில் நீங்கள் குறுக்கிட வேண்டாம்’

 • 3

  (ஒருவர் அல்லது ஒன்று) எதிர்ப்படுதல்.

  ‘கடைத்தெருவுக்குச் சென்றபோது வழியில் நண்பன் குறுக்கிட்டான்’
  ‘சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பையனின் முன்பு மாடு ஒன்று குறுக்கிட, தடுமாறி விழுந்துவிட்டான்’