தமிழ் குறுக்கே யின் அர்த்தம்

குறுக்கே

வினையடை

 • 1

  (ஒரு பரப்பு, பொருள், ஆறு, பாதை முதலியவற்றின் இரு பக்கங்களுக்கும்) நடுவில்.

  ‘நடக்கிற வழியில் குறுக்கே நிற்காதே!’
  ‘ரம்பத்தைக் கொண்டு இரண்டு பேர் மரத்தைக் குறுக்கே அறுத்துக்கொண்டிருந்தார்கள்’

 • 2

  (பேச்சின்) இடையில்.

  ‘நான் சொல்லி முடிக்கிறவரை குறுக்கே பேசாதே!’

தமிழ் குறுக்கே யின் அர்த்தம்

குறுக்கே

இடைச்சொல்

 • 1

  (‘கு’, ‘இன்’ ஆகிய உருபுகளைச் சார்ந்து வரும்போது) ‘ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம்வரை’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘சாலைக்குக் குறுக்கே பள்ளம் வெட்டியிருந்தார்கள்’
  ‘மகாநதியின் குறுக்கே ஹிராகுட் அணை கட்டப்பட்டிருக்கிறது’
  ‘மார்பின் குறுக்கே இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றான்’