தமிழ் குறுகிய யின் அர்த்தம்

குறுகிய

பெயரடை

 • 1

  (பரப்பளவில் அல்லது காலத்தில்) குறைந்த.

  ‘குறுகிய சாலை’
  ‘குறுகிய சந்து’
  ‘குறுகிய காலப் பயிர்’

 • 2

  (அறிவு, சிந்தனை போன்றவை குறித்து வரும்போது) பரந்த அளவில் இல்லாத.

  ‘குறுகிய நோக்கம்’
  ‘குறுகிய கண்ணோட்டம்’
  ‘பிரியம் என்ற சொல்லை காதல் என்ற குறுகிய பொருளில் பயன்படுத்தியுள்ளார் அந்தக் கவிஞர்’
  ‘பெண்களைப் பற்றிக் குறுகிய பார்வை கொண்ட மனிதர் அவர்’