தமிழ் குறுகு யின் அர்த்தம்

குறுகு

வினைச்சொல்குறுக, குறுகி

 • 1

  (பெயர், சொல் முதலியன நீளத்தில்) குறைதல்.

  ‘‘வேங்கடாசலம்’ என்ற பெயர் ‘வெங்கு’ என்று குறுகிவிட்டது’

 • 2

  (வெட்கம், அவமானம் முதலியவற்றால் உடல்) சிறுத்து விட்டதைப் போல் உணர்தல்.

  ‘தனக்கு இப்படி ஓர் அவமானம் வந்துவிட்டதே என்று அவர் குறுகிப்போனார்’

 • 3

  (படிப்படியாக) குறைந்து சிறிதாதல்.

  ‘பரந்த நெற்றியிலிருந்து குறுகிவரும் மோவாய்’