தமிழ் குறுகுறு யின் அர்த்தம்

குறுகுறு

வினைச்சொல்குறுகுறுக்க, குறுகுறுத்து

 • 1

  (தவறுகளால் மனம்) உறுத்துதல்.

  ‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’
  ‘அவனுக்குத் தீங்கிழைத்து விட்டோமே என்று குறுகுறுத்த மனத்தைச் சமாதானப்படுத்த முடியவில்லை’

 • 2

  (உடலில்) ஊர்வது அல்லது அரிப்பது போன்று உணர்தல்.

  ‘முதுகில் ஏதோ குறுகுறுக்க அவசரமாகச் சட்டையைக் கழற்றி எறிந்தான்’
  ‘குளிர்ந்த நீரில் கால் வைத்ததும் உள்ளங்கால் குறுகுறுத்ததுபோல் இருந்தது’

 • 3

  (ஒன்றைச் செய்வதற்குக் கை) பரபரத்தல்.

  ‘உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்று கைகள் குறுகுறுத்தன’