தமிழ் குறுணி யின் அர்த்தம்

குறுணி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு ஒரு மரக்கால் (அளவு).

  ‘வயலில் வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு நாளைக்குக் கூலியாகக் குறுணி நெல் கிடைக்கும்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு அருகிவரும் வழக்கு சிறியது; பொடி.

  ‘அவள் நெற்றிப்பொட்டு குறுணியாக இருந்தது’
  ‘குறுணி எழுத்துகள்’
  ‘குறுணி விதைகள்’
  ‘அரிசி முழுவதும் ஒரே குறுணிக் கல்லாக இருக்கிறது’