தமிழ் குறும்பு யின் அர்த்தம்

குறும்பு

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  சிறு தொல்லை தரும் விளையாட்டுச் செயல்/மகிழ்விக்கும் விளையாட்டுத்தனம்.

  ‘குறும்பு செய்யாமல் ஒழுங்காகப் படி!’
  ‘குறும்புப் பார்வை’
  ‘குறும்புச் சிரிப்பு’

 • 2

  (பெண்ணிடம் நடந்துகொள்ளும்) பண்பாடற்ற செயல்.

  ‘தனியாக நின்றிருந்த பெண்ணிடம் குறும்பு செய்த வாலிபரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்’