குறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குறை1குறை2குறை3

குறை1

வினைச்சொல்குறைய, குறைந்து, குறைக்க, குறைத்து

 • 1

  எண்ணிக்கை, அளவு, தன்மை போன்றவை முன்பிருந்த நிலைக்கும் கீழே வருதல்.

  ‘மூல வளங்கள் குறைந்துகொண்டிருப்பது கவலை அளிக்கும் செய்தி’
  ‘இளைஞர்களிடையே ஒழுக்கம் குறைந்துவருகிறது என்று ஒவ்வொரு தலைமுறையிலும் சொல்கிறார்கள்’
  உரு வழக்கு ‘எனக்கும் அவருக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்துவிட்டது’

 • 2

  (ஒன்றின் வேகம், தீவிரம் முதலியன) தணிதல்; கட்டுப்படுதல்.

  ‘அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் புயலின் வேகம் குறைந்தது’
  ‘மாத்திரையால் தலைவலி குறைந்திருக்கிறது’

குறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குறை1குறை2குறை3

குறை2

வினைச்சொல்குறைய, குறைந்து, குறைக்க, குறைத்து

 • 1

  எண்ணிக்கை, அளவு, தன்மை போன்றவற்றை முன்பு இருந்த நிலைக்குக் கீழே கொண்டுவருதல்.

  ‘வீட்டுச் செலவைப் பாதியாகக் குறைத்துவிட வேண்டும்’
  ‘ஆடம்பரப் பொருள்களின் உற்பத்தியைக் குறைப்பதுகுறித்து ஆலோசனை நடக்கிறது’
  ‘கட்டையின் நீளத்தை அரை அங்குலம் குறை’

 • 2

  (ஒன்றின் வேகம், தீவிரம், உயர்வு முதலியவற்றை) தணித்தல்; கட்டுப்படுத்துதல்.

  ‘குழந்தைகள் சாலையைக் கடப்பதைப் பார்த்ததும் காரின் வேகத்தைக் குறைத்தார்’
  ‘இந்த மாத்திரை வலியைக் குறைக்குமா?’
  ‘விலைவாசி ஏற்றத்தைக் குறைக்க நடவடிக்கை’

 • 3

  (குறிப்பிட்ட தொகையை) கழித்தல்; பிடித்தல்.

  ‘அவர் நமக்குத் தர வேண்டியதைக் குறைத்துவிட்டுப் பாக்கியைக் கொடு’

குறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குறை1குறை2குறை3

குறை3

பெயர்ச்சொல்

 • 1

  இருக்க வேண்டியது இல்லாத நிலை அல்லது வேண்டுவது கிடைக்காத நிலை; ஒன்று போதுமான அளவு இல்லாத நிலை.

  ‘குழந்தை ஒரு குறையும் இல்லாமல் வளர்கிறது’
  ‘நல்ல நண்பர்கள் இல்லாத குறையை உணர்கிறேன்’
  ‘மக்களின் குறைகளைத் தீர்க்கத்தான் அரசு’
  ‘பெண்ணுக்குப் படிப்பு இருக்கிறது, பணம் இருக்கிறது. எதில் குறை?’
  ‘சிறிய வீடாக இருந்தாலும் எந்தக் குறையும் இல்லை’
  ‘நான்கு பேரோடு பேசத் தெரியாததுதான் என் குறை’

 • 2

  (ஒன்று இல்லாததால், நிறைவேறாததால் உண்டாகும்) வருத்தம்; ஆதங்கம்.

  ‘அவனுக்குக் குழந்தை இல்லை என்கிற குறை’
  ‘அவன் இவ்வளவு படித்தும் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதுதான் குறை’

 • 3

  தன்மை அல்லது அளவு போன்றவற்றில் முழுமையாக இல்லாதது.

  ‘நேற்றுக் குறை மழைதான் பெய்தது’

 • 4

  உடல் ரீதியாக ஒருவருக்கு உள்ள கோளாறு அல்லது பிரச்சினை.

  ‘பேச்சுக் குறை உள்ளவன’
  ‘ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை என்றால் குறை யாரிடம் இருக்கிறது என்று தெரிய வேண்டும்’

 • 5

  (சில எதிர்மறை வினை வடிவங்களோடு) குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்று கிட்டத் தட்ட நடந்திருக்கக்கூடிய ஒன்று என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்.

  ‘அவன் அழாததுதான் குறை’
  ‘அடி விழாத குறை’