தமிழ் குறைச்சல் யின் அர்த்தம்

குறைச்சல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (எதிர்மறை வாக்கியங்களில் வரும்போது) தேவை; அசௌகரியம்; குறை.

  ‘இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்?’

 • 2

  பேச்சு வழக்கு குறைவு.

  ‘சம்பளம் குறைச்சல்’
  ‘குறைச்சலான கூலிக்கு யார் வேலை செய்வார்கள்?’

 • 3

  பேச்சு வழக்கு குறைந்தபட்சம்.

  ‘எவ்வளவு குறைச்சலாகப் பார்த்தாலும் இந்த வீடு இருபது இலட்சம் ரூபாய் பெறும்’