தமிழ் குறைபடு யின் அர்த்தம்

குறைபடு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (வேண்டியது கிடைக்காததாலோ எதிர்பார்ப்பு பொய்ப்பதாலோ ஏற்படும்) வருத்தத்தை வெளிப்படுத்துதல்; குறைகூறுதல்.

    ‘தன்னுடைய சிறுகதைகளை எந்தப் பத்திரிகையும் பிரசுரிப்பதில்லை என்று நண்பன் குறைபட்டுக்கொண்டான்’
    ‘அவனைப் பற்றி என்னிடம் நீ குறைபட்டுப் பயனில்லை’
    ‘என்னை யார் கவனிக்கிறார்கள் என்று பாட்டி குறைபட்டுக்கொண்டாள்’