தமிழ் குற்றவாளி யின் அர்த்தம்

குற்றவாளி

பெயர்ச்சொல்

 • 1

  விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்.

  ‘அவன் ஒரு கொலைக் குற்றவாளி’
  ‘பொருளாதாரக் குற்றவாளி’

 • 2

  தவறு செய்த நபர்.

  ‘அப்பா பையில் இருந்த பணத்தைக் காணவில்லை என்பதற்காக என்னைக் குற்றவாளி ஆக்காதீர்கள்’