தமிழ் குலம் யின் அர்த்தம்

குலம்

பெயர்ச்சொல்

 • 1

  (மனித) இனம்.

  ‘பண்பாடு என்பது மனித குலத்திற்கே உரியது’

 • 2

  வம்சம்.

  ‘சில அரசர்கள் தங்களைச் சூரிய குலம் என்று கூறிக்கொண்டனர்’

 • 3

  (சமூகப் பிரிவுகளைக் குறிக்கும்போது) ஜாதி.

  ‘பையனின் குலம், கோத்திரம் எல்லாம் தெரிந்த பிறகுதான் பெண் கொடுப்போம்’