தமிழ் குலுங்கு யின் அர்த்தம்

குலுங்கு

வினைச்சொல்குலுங்க, குலுங்கி

 • 1

  லேசாக இங்குமங்கும் அசைந்து அதிர்தல்.

  ‘அவர் சிரிக்கும்போது உடல் முழுவதும் குலுங்கும்’
  ‘உணவு பரிமாறும்போது கைவளையல்கள் குலுங்கின’

 • 2

  (காய்த்தல், பூத்தல் ஆகிய வினைகளுடன்) நிறைந்திருத்தல்.

  ‘தோட்டம் முழுக்கப் பூக்கள் பூத்துக் குலுங்கின’
  ‘செடிகளில் மிளகாய் காய்த்துக் குலுங்கியது’