குலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குலை1குலை2குலை3குலை4

குலை1

வினைச்சொல்குலைய, குலைந்து, குலைக்க, குலைத்து

 • 1

  (உடல் கட்டு) தளர்தல்.

  ‘வயதாகியும் உடல் கட்டுக் குலையவில்லை’

 • 2

  (நம்பிக்கை, ஆசை முதலியன) சிதைதல்.

  ‘என் நம்பிக்கை குலைந்துவிட்டது’

 • 3

  (கூந்தல்) பிரிந்து அலைதல்.

  ‘குலைந்த முடியும் அழுத கண்ணுமாக அவள் வந்து நின்றாள்’

 • 4

  (பொருள்கள்) கலைதல்.

  ‘காகித அடுக்குகள் குலைந்து சிதறின’

குலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குலை1குலை2குலை3குலை4

குலை2

வினைச்சொல்குலைய, குலைந்து, குலைக்க, குலைத்து

 • 1

  (ஒற்றுமை, அமைதி, நடவடிக்கை முதலியவற்றை) கெடுத்தல்.

  ‘நாட்டு ஒற்றுமையைக் குலைக்க முயலும் சக்திகளை முறியடிக்க வேண்டும்’

 • 2

  (நம்பிக்கை முதலியவற்றை) சிதைத்தல்.

  ‘என் நம்பிக்கையைக் குலைக்கும் நிகழ்ச்சி நடந்துவிட்டது’

குலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குலை1குலை2குலை3குலை4

குலை3

வினைச்சொல்குலைய, குலைந்து, குலைக்க, குலைத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு

  காண்க: குரை

குலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குலை1குலை2குலை3குலை4

குலை4

பெயர்ச்சொல்

 • 1

  (மரத்தில்) காய்களின் தொகுப்பு.

  ‘தென்னம் குலை’
  ‘வாழைக் குலை’

 • 2

  வட்டார வழக்கு

  காண்க: குழை