வினைச்சொல்
- 1
நீரில் அமிழ்ந்தோ நீரை உடம்பின் மேல் ஊற்றிக்கொண்டோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக்கொள்ளுதல்; நீராடுதல்.
- 2
(விலங்குகள், பறவைகள்) நீரில் அமிழ்ந்து கிடத்தல், நீரைத் தங்கள் உடல்மீது தெளித்துக்கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்தல்.
‘அந்தக் காட்டாற்றில் யானைகள் கூட்டமாகக் குளித்துக்கொண்டிருந்தன’‘காக்கை குளிப்பதைப் பார்த்திருக்கிறாயா?’ - 3
(கருவுறவில்லை என்ற பொருளைத் தரும் விதத்தில் பயன்படுத்தும்போது) மாதவிடாய் வந்து நீராடுதல்.
‘உன் பெண் இன்னும் குளித்துக்கொண்டிருக்கிறாளா?’‘என் மகள் குளித்து இரண்டு மாதம் ஆகிறது’
பெயர்ச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு
காண்க: குளியல்