தமிழ் குளிப்பாட்டு யின் அர்த்தம்

குளிப்பாட்டு

வினைச்சொல்குளிப்பாட்ட, குளிப்பாட்டி

 • 1

  (உடம்பிலிருக்கும் அழுக்கைப் போக்க) நீர் ஊற்றிக் கழுவிவிடுதல்.

  ‘குழந்தையைக் குளிப்பாட்டிக் கண்ணுக்கு மையிட்டாள்’
  ‘மாட்டைக் குளிப்பாட்டக் குளத்திற்கு ஓட்டிக்கொண்டு போனான்’

 • 2

  (இறுதிச் சடங்கில் பிரேதத்தை) நீரால் கழுவுதல்.

  ‘பிரேதத்தைக் குளிப்பாட்டியாகிவிட்டதா?’