தமிழ் குளிர் யின் அர்த்தம்

குளிர்

வினைச்சொல்குளிர, குளிர்ந்து

 • 1

  (ஒரு பொருள், திரவம்) சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலையை அடைதல்.

  ‘மலைப் பிரதேசங்களில் மாலையானால் குளிர ஆரம்பித்துவிடும்’

 • 2

  குளிரை உடல் உணர்தல்.

  ‘கதவைச் சாத்து, எனக்குக் குளிர்கிறது’
  ‘நன்றாகப் போர்த்திக்கொள், குளிராது’

 • 3

  மகிழ்ச்சி அடைதல்; சுகம் என்று உணர்தல்.

  ‘அவரின் சிறப்பான வரவேற்பில் குளிர்ந்துபோனார்’
  ‘இயற்கைக் காட்சியைக் கண்குளிரக் கண்டேன்’
  ‘பாடலைக் கேட்டுக் காது குளிர்ந்தது’

தமிழ் குளிர் யின் அர்த்தம்

குளிர்

பெயர்ச்சொல்

 • 1

  வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.

  ‘காஷ்மீர் ஒரு குளிர்ப் பிரதேசம்’

 • 2

  உடல் வெப்பத்தைவிடக் காற்று மண்டலத்தின் வெப்பம் குறைவாக இருக்கும் நிலை.

  ‘குளிரால் உடல் நடுங்கியது’
  ‘குளிருக்குப் பாதுகாப்பாகக் கம்பளிச் சட்டை அணிந்துகொண்டான்’