தமிழ் குளிர்விட்டுப்போ யின் அர்த்தம்

குளிர்விட்டுப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (அடக்க ஆள் இல்லாததால்) பயம் இல்லாமல் போதல்.

    ‘அவனுக்குக் குளிர்விட்டுப்போயிற்று; இனிமேல் நம்மை மதிக்க மாட்டான்’
    ‘அப்பா ஊரில் இல்லை என்பதால் உனக்குக் குளிர்விட்டுப்போயிற்றா?’