தமிழ் குளுமை யின் அர்த்தம்

குளுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இதமான) குளிர்ச்சி உடையது.

  ‘காற்று குளுமையாக வீசியது’
  ‘குளுமையான மர நிழலில் துண்டை விரித்துப் படுத்தேன்’

 • 2

  (கண், காது, மனம் முதலியவற்றுக்கு) இதமளிப்பது.

  ‘குளுமையான சிரிப்போடு வரவேற்றாள்’
  ‘கண்களுக்குக் குளுமை தரும் காட்சிகள்’