தமிழ் குழந்தைத்தனம் யின் அர்த்தம்

குழந்தைத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கள்ளங்கபடம் இல்லாத தன்மை; வாழ்க்கை அனுபவம் இல்லாத வெகுளித்தனம்.

  ‘அந்தப் பையனின் குழந்தைத்தனமான முகம் இன்னும் எனக்கு மறக்கவில்லை’
  ‘என்னைப் பார்த்து அவள் குழந்தைத்தனமாகச் சிரித்தாள்’

 • 2

  சிறுபிள்ளைத்தனம்.

  ‘இதுபோலக் குழந்தைத்தனமான கேள்விகளையெல்லாம் இங்கே கேட்கக் கூடாது என்று அவர் என்னைக் கடிந்துகொண்டார்’