தமிழ் குழப்பு யின் அர்த்தம்

குழப்பு

வினைச்சொல்குழப்ப, குழப்பி

 • 1

  தெளிவற்ற நிலைக்கு (ஒருவரை) உள்ளாக்குதல்; தெளிவு இல்லாதபடி ஆக்குதல்.

  ‘ஒரு சராசரி மனிதனைக் குழப்புகிற வகையில் ஒரே மருந்து பல பெயர்களில் விற்பனையாகிறது’
  ‘குழந்தைகளைக் குழப்பாமல் பாடம் சொல்லித்தர வேண்டும்’
  ‘எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ சொல்லி அவனைக் குழப்பிவிட்டார்’

 • 2

  (மாவு, வண்ணம் போன்ற பொருள்களை நீர் முதலியவற்றோடு சேர்ந்து) குழைத்தல்.

  ‘நீரில் களிமண்ணைக் குழப்பிச் சுவரில் பூசிக்கொண்டிருந்தான்’
  ‘சில வர்ணப் பொடிகள் எண்ணெயில் குழப்பினால்தான் கரையும்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (முடியை) கலைத்தல்; (கூட்டத்தை) கலைத்தல்.

  ‘காற்று தலையைக் குழப்பிவிட்டது’