தமிழ் குழப்பம் யின் அர்த்தம்

குழப்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (என்ன நடக்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாட்டில், சமூகத்தில், தனிநபர்களிடம் காணப்படும்) தெளிவற்ற நிலை.

  ‘சிப்பாய்க் கலகத்தை ஒட்டி நாட்டில் பெருங்குழப்பங்கள் தோன்றின’
  ‘குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நகரில் குழப்பம் நிலவியது’
  ‘பொறியியல் கல்லூரிச் சேர்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் பெற்றோர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கின்றன’
  ‘போர்க்காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் நிர்வாகம் நிலைகுலைந்தது’
  ‘வினாத்தாளைப் பார்த்தவுடன் எதற்கு முதலில் விடையளிப்பது என்ற குழப்பம் வந்தது’
  ‘குழப்பமான சூழ்நிலையில் எந்த முடிவுக்கும் வரக் கூடாது’

 • 2

  (சிந்தனையில்) தெளிவின்மை.

  ‘என் கட்டுரையில் எந்தக் குழப்பமும் இல்லை’
  ‘எண்ணத்தில் காணப்படும் குழப்பம் எழுத்திலும் காணப்படுகிறது’
  ‘உங்கள் கட்சியில் கொள்கைக் குழப்பம் மிகுந்துவிட்டது’

 • 3

  (கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில்) கலவரமான சூழல்.

  ‘நீதிமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தியவர் தண்டிக்கப்பட்டார்’
  ‘ஊர்வலத்தில் எங்கிருந்தோ ஒரு கல் வந்து விழுந்தவுடன் குழப்பம் ஏற்பட்டது’
  ‘பேச்சாளர் எதிர்க் கட்சியினரைத் தாக்கிப் பேச ஆரம்பித்ததும் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் எழுந்தன’