தமிழ் குழம்பு யின் அர்த்தம்

குழம்பு

வினைச்சொல்குழம்ப, குழம்பி

 • 1

  தெளிவற்ற நிலைக்கு உள்ளாதல்; முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுதல்.

  ‘இருவரும் ஒரே மாதிரி இருந்ததால் யார் அண்ணன், யார் தம்பி என்று தெரியாமல் குழம்பிப்போனேன்’
  ‘கடைசி வண்டியையும் தவறவிட்டுவிட்டு என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினார்’

 • 2

  (சேறு, மண் முதலியவை) நீருடன் கலந்து குழகுழப்பாக இருத்தல்.

  ‘மழை நீர் பட்டுச் சேறு குழம்பியிருந்தது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (முடி) கலைதல்; (கூட்டம்) கலைதல்; (வரிசை) கலைதல்.

  ‘தலைமுடி காற்றில் குழம்பிவிட்டது’
  ‘புத்தக நிரை குழம்பிப்போயிருக்கிறது’

தமிழ் குழம்பு யின் அர்த்தம்

குழம்பு

பெயர்ச்சொல்

 • 1

  காய்கறியை அல்லது இறைச்சியை வேகவைத்துக் காரச் சுவையுடன் (உணவில் ஊற்றிச் சாப்பிடத் தகுந்த வகையில்) தயாரிக்கும் உணவுப் பண்டம்.

  ‘இன்றைக்குப் புளிக்குழம்பு பிரமாதமாக இருக்கிறது’

 • 2

  (தங்கம், இரும்பு போன்ற உலோகங்களின்) திரவ நிலை.

 • 3

  (சந்தனம், வண்ணம் போன்றவற்றின்) கரைசல்.