தமிழ் குழாம் யின் அர்த்தம்

குழாம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒருசிலர் அடங்கிய கூட்டம்.

  ‘கல்லூரிப் பெண்கள் குழாம்’
  ‘நண்பர்கள் குழாம்’

 • 2

  உயர் வழக்கு (ஒரே நோக்கு உடையவர்களின்) குழு; அமைப்பு.

  ‘எழுத்தாளர் குழாம்’
  ‘கவிஞர் குழாம்’
  ‘அறிஞர் குழாம்’