குழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழி1குழி2குழி3குழி4

குழி1

வினைச்சொல்குழிய, குழிந்து, குழிக்க, குழித்து

 • 1

  குழிவு ஏற்படுதல்.

  ‘கன்னம் குழியச் சிரித்தாள்’

குழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழி1குழி2குழி3குழி4

குழி2

வினைச்சொல்குழிய, குழிந்து, குழிக்க, குழித்து

 • 1

  குழிவு உண்டாகும்படி செய்தல்.

  ‘சாதத்தைக் குழித்து அதில் குழம்பு ஊற்றிக்கொண்டாள்’
  ‘கிண்ணம்போல் கையைக் குழித்து நீரைப் பிடித்து முகத்தில் தெளித்துக்கொண்டான்’

குழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழி1குழி2குழி3குழி4

குழி3

பெயர்ச்சொல்

 • 1

  உள்நோக்கிச் செல்லுமாறு அமைந்திருக்கும் குழிவு.

  ‘ஐந்து குழி இட்லித்தட்டு’
  ‘தரை ஏன் இப்படிக் குழிகுழியாக இருக்கிறது?’

 • 2

  நிலத்தைத் தோண்டி மண்ணை எடுப்பதால் ஏற்படுத்தப்பட்ட பள்ளம்.

  ‘வாழைக் கன்று நடுவதற்குக் கொல்லையில் குழி தோண்டியாயிற்று’

குழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழி1குழி2குழி3குழி4

குழி4

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு நிலத்தை அளப்பதற்கான அளவுகளில் நாற்பத்தி நான்கு மீட்டர் கொண்ட ஒரு அளவு.